Thursday 4 July 2013

2013-03- 23 லண்டனில் நடைபெற்ற "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம்




லண்டனில் நடைபெற்ற "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம்
பிரித்தானியத் தலைநகர் லண்டனில்

லண்டனில் நடைபெற்ற "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம்
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் தமிழீழத்திற்கான "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கம் நடைபெற்றது. நாஹறோ கவுன்சில் மண்டபத்தில் நடாத்தப்பட்ட இந்த அறிமுக அரங்கில் ஈழத் தமிழர்கள் என்ற உணர்வோடு அமைப்பு வேறுபாடு இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ் அறிமுக அரங்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் தலைமை தாங்கி "தமிழீழ சுதந்திர சாசனம்" தொடர்பான விரிவான விளக்கத்தை வழங்கினார




1955 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா சுமார் 50,000 தொண்டர்களைக் கொண்டு மக்கள் கருத்துப் பெற்று அவர்களின் நியாயமான விருப்புக்கள்ஐயும், கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக தனது விடுதலைக்கான சாசனத்தை வரைந்திருந்தது.
www.youtube.com/embed/Ycdj7GA4Wd0" frameborder="0" allowfullscreen></iframe>

அதே போன்று ஈழத்தில் (தாயகத்தில்) வாழ்கின்ற பொதுமக்கள் முதல் புத்திஜீவிகள் வரை அனைவரது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் உள்வாங்கியே இந்த "தமிழீழ சுதந்திர சாசனம்" அமைய இருக்கிறது.
இவ் "தமிழீழ சுதந்திர சாசனம்" ஆனது உலகெங்கும் உள்ள தமிழீழ ஆதரவு கொண்ட அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகள், இளையோர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மற்றும் தமிழீழ விடுதலைக்காக போராடிய போராளிகள் என அனைவரது ஆதரவோடும், ஆலோசனைகளோடும் இச் சாசனம் உருவாக்கப்படவுள்ளதால் நடைபெற்ற "தமிழீழ சுதந்திர சாசனம்" அறிமுக அரங்கில் கலந்துகொண்டவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment