தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக, தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.



 கடந்த மே18ம் நாள் முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பில் இடம்பெற்றிருந்த ஊடகநிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.
முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான ஆதரவினை அனைத்துலக சிவில் சமூகத்தின் மத்தியில் பெற்றுக் கொள்வதோடு , தமிழ்மக்கள் மத்தியிலும் இது தொடர்பிலான விழிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

2009ம் ஆண்டுக்கு பின்னர் ஈழத்தமிழினம் தனது அகத்திலும்- புறத்திலும் புதியதொரு சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழீழ சுதந்திர வேட்கையில் தமிழ்மக்கள் இன்னும் வழிப்பாகவுள்ளனர் என்பதனை தமிழீழ சுதந்திர சாசனத்தில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டதன் ஊடாக தமிழ்மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் எனஅமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் மேலும் அந்நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த மாநாட்டில், முழுமையாக பங்கெடுத்து தனது கருத்துக்களையும் அம்மாநாட்டில் வழங்கியிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் நிரந்தரச் செயலர் விஜய் ஜெயந்தன் அவர்கள், மாநாட்டில் பங்கெடுத்திருந்த பேராளர்கள் வழங்கிய கருத்துக்கள் தொடர்பில் தெளிவாக இந்நிகழ்சியில் வழங்கியிருந்தார்.
தமிழீழ சுதந்திர சாசன மாநாடு மற்றும் முரசறைவு ஆகியனவற்றின் பிரதான விடயங்கங்களின் காணொளித் தொகுப்பினை குறித்த இந்த நிகழ்சியின்
ஊடாக முமுமையாக காணமுடியும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

http://youtu.be/GHuic80f_I8

http://youtu.be/wS_CF8raBhE

http://youtu.be/_WMyukaAE6s

http://youtu.be/WMc3PaL14lg