Wednesday 3 July 2013

2011-10-21 அடுத்தவேளை என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் ! அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ்.

அடுத்தவேளை என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் ! அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ்
 
[Friday, 2011-10-21 22:27:18]

மலேசிய அரசாங்கத்தினால் அகதிகளுக்கான வதிவிட அனுமதி வழங்கப்படாத நிலை நீடித்துவரும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனேயே ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் விவாகாரத்துறை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்தார்.
மலேசியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ள அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் மலேசிப் பயணம் தொடர்பில் நாதம் ஊடகசேவைக்கு வழங்கிய அனுபவப் குறிப்பிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான சாசனத்தில் மலேசியா தன்னை இணைத்துக் கொள்ளாத நிலையில் அங்கு அகதித்தஞ்சம் சட்டபூர்வமாக கோரமுடியாத நிலையுள்ளது. முள்ளிவாய்க்காலுக்கு முன்னரும் பின்னருமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR நிறுவனமே மலேசியாவில் அகதித்தஞ்சம் கோருபவர்களின் விவகாரங்களை கையாண்டு வருகின்றது.
UNHCR நிறுவனத்தில் அகதிகளாக பதிவு செய்கின்றவர்களுக்கு வழங்கப்படுகின்ற பதிவுச்சிட்டையே அகதிகள் என்ற அவர்களுக்கு அடையாளத்தை வழங்குகின்றது.
இந்நிலையில் மலேசியாவில் உள்ள 4 ஆயிரம் ஈழத்தமிழ் அகதிகளில் ஆயிரம் பேர் அளவிலேயே இவ்வாறு பதிவு செய்தவர்களாக உள்ளனர் என மலேசியாவில் அகதிகள் விவாகாரம் குறித்து தெரிவித்த அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் அங்கு அகதிகளாக தஞ்சம் கோரியுள்ள ஈழதமிழர்கள் குறித்த தெரிவித்தபோது
UNHCR அமைப்பினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை அகதிகள் மலேசியாவில் தற்காலிகமாக தங்குவதற்குரிய ஒரு சட்டபூர்வ பத்திரமாக இல்லாத நிலையில் கல்விக்கோ அல்லது மருத்துவதேவைகளுக்கோ பாவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக இந்த அடையாள அட்டை பல காவல்துறையினர் அறிந்திராத நிலையில் ஒவ்வொரு நாட்களையும் மிகுந்த அச்சத்துடனும் நெருக்கடியுடனும் கழித்து வருகின்றனர். குறிப்பாக வெளிப்படையான தொழில்வாய்ப்புக்கள் அற்ற நிலையில் பல தமிழர்கள் சோளன் உடைத்துக் கொடுத்வே தங்கள் அன்றாடச் சீவியத்தை போக்கி வருகின்றனர்.
பெரும்பாலான மக்களின் கவலை அவர்களுயை பிள்ளைகளின் கல்வி அவர்களின் எதிர்காலம் குறித்ததாகவே இருக்கின்றது என தெரிவித்தார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வகையில் இந்த அகதிகளுக்கான விவகாரத்தை கையாள்கின்றது என கேட்டபோது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சு UNHCR அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட   STORM எனும் அமைப்பி ஊடாக ஈழத்தமிழ் அகதிகளின் தேவைகளை கவனத்தில் எடுத்து இயங்குகின்றது. இதன் நிர்வாக அமைப்பாளர்களாக திரு.பாஸ்கரன் திருமதி ரஞ்சினி ஆகியோர் உள்ளனர். பெரும்பாலான ஈழத்தமிழ் அகதிகளுக்கான தேவைகைள அமைப்பு வழங்கி வருவதோடு அவர்களுக்கான ஒரு பாதுகாப்பு மையமாகவும் இயங்கி வருகின்றது என தெரிவித்தார்.
பயணத்தின் ஊடக நா..அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் அமைச்சின் ஊடாக பல உதவிகளை பலரைச் சந்தித்து பெற்றுக் கொடுக்க கூடியதாக இருந்ததென தெரிவித்த அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் சந்திப்புக்கள் குறித்து விபரித்த போது UNHCR நிறுவனத்தின் பிரதிநிதி Amanda அவர்களைச் சந்தித்து மலேசிய ஈழத்தமிழ் அகதிகளின் நிலை குறித்து உரையாடினோம்.
நா..அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் அமைச்சின் ஊடாக அவர்களின் எத்தகையை தேவைகளை பூர்த்தி செய்யலாம் என விவதித்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை உடனடியாகவே ஏற்பாடு செய்து கொடுத்தோம்.
இதேவேளை மலேசியாவின் பீனாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர். ராமசாமி அவர்களையும் மற்றும் மலேசிய இலங்கையர் கொங்கிரஸ் தலைவர் டாற்தோ ரகுபதி ஐயா அவர்களையும் சந்தித்து உரையாடியிருந்தோம்.
சிங்கப்பூரில் நின்ற ஒரிரு நாட்களின் அங்குள்ள ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்ட சிலரையும் குறிப்பாக பேராசிரியர் சொர்ணராஜா அவர்களோடும் உரையாடியிருந்தோம் என தெரிவித்தார்.
நிறைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறித்த பெருத்த நம்பிக்கையோடும் எதிர்பார்போடும் அங்குள் ஈழத்தமிழ் அகதிகள் உள்ளனர் என தெரிவித்த அமைச்சர் அவர்கள் எங்களுக்கான ஒரு அரசாங்காம் இருக்கின்றதென்ற மனவுறுதி அங்குள் ஈழத்தமிழர்களின் வெளிப்பட்டது. இதேவேளை நாங்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நாங்கள் சந்தித்த பல பிரதிநிதிகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உலக அங்கீகாரமே எமது தமிழீழ அரசுக்கான ஒரு சட்டபூர்வ அங்கீகாரமாக அமையும் என்ற நம்பிக்கையோடு உள்ளனர்.
இதற்கான தங்களின் முழுமையான ஒத்துழைப்பை அவர்கள் வழங்க தயாராகவும் உள்ளனர் என தெரிவித்தார்.  

0 comments:

Post a Comment