Wednesday 3 July 2013

2012-01-15 தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியா


 


தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம்
 பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது
By naatham On 19 Jan, 2012 At 06:44 PM |
நாடுகடந்த அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டு திட்டத்தின் ஓர்அங்கமாகவாரம் ஒரு டொலர்நிதித்திட்டம் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிதித்துறை அமைசகத்தின் பிரித்தானிய செயற்பாட்டுக் குழுத் தலைவர்  கலாநிதி வசந்தன் அவர்களின் தலைமையில் 15-01-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் ஹறோ பகுதியில் உத்தியோக நிகழ்வு இடம்பெற்றது.
தமிழீழ தேசிய விடுதலை நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை பலப்படுத்தும் நோக்கில் வாரம் ஒரு டொலருக்கான உண்டியல் திட்டம் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைகான அரசியல் பணியில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் மூத்த உறுப்பினரான திரு. மாறன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமரும் மாவீரர், போராளிகள் குடும்ப நலன் பேணல் அமைச்சருமான திரு. ருத்திராபதி சேகர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர், முதியோர் நலன் பேணல் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை முருகதாஸ், பிரித்தானியத் தமிழ்ர் பேரவையின் சார்பில் திரு. வசந்தன் ஆகியோர் பொதுச்சுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர்.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியத்துவம் அது தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கு முன்னெடுத்து வருகின்ற பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
அத்தோடு ஈழவிடுதலை போராட்டத்தின் சனநாயக போராட்ட வடிவமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு தமிழீழ தனியரசினை நிறுவவதற்கான திறவுகோலாகவுள்ள நா.. தமிழீழ அரசாங்கத்தினை பலப்படுத்தவும் வளப்படுத்தவும் வேண்டிய மக்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து  விளக்கப்பட்டது.
கலாநிதி வசந்தன் அவர்கள் பிரித்தானியாவில் முன்னெடுக்கத் தொடங்கியுள்ள வாரம் ஒரு டொலருக்கான உண்டியல் திட்டத்தினைப் பற்றியும் அதன் தேவை பற்றியும், இதன்மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
நிகழ்வின் குறிப்பிடதக்க விடயமாக மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதோடு பிரித்தானியாவிற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அவை உறுப்பினர்கள் மக்கள் முன் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
கலந்து கொண்ட மக்கள் உணர்வுபூர்வமாக தாயக விடுதலை நோக்கிய பயணத்துக்கு தங்களின் பங்களிப்பை செலுத்தும் முகமாக உண்டியல்கள் பதிவுசெய்து பெற்றுச் சென்றனர்.

பெண்கள் மற்றும் சிறுவர், முதியோர் நலன் பேணல் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் கூறுகையில்..

ஒவ்வொரு செயற்திட்டங்களுக்கும் நிதி இன்றியமையாதது. மக்கள் அதனை உணர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்புக்களையும், நிதி உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழீழ விடுதலைப் போரில் எத்தனையோ சாதனைகளை தமிழீழப் பெண்கள் சாதித்துக் காட்டியுள்ள நிலையில் புலம்பெயர் தமிழ்ர்கள் முன்னெடுக்கும் அரசியல் போரில் பெண்கள் மிக மிகக் குறைவாகவே பங்கெடுத்துக்கொள்வது கவலை அளிப்பதாகவும், எமது தாயக மீட்பிற்கானதும் தமிழர்களின் விடுதலை வாழ்விற்குமான அரசியல் வேலைத்திட்டங்களில் அதிகளவு பெண்கள் பங்குகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

0 comments:

Post a Comment