Thursday 15 August 2013

2013-08-14 பொதுநலவாய மாநாட்டு விவகாரம் : கையெழுத்து வேட்டையில் பிரித்தானியத் தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

பொதுநலவாய மாநாட்டு விவகாரம் : கையெழுத்து வேட்டையில் பிரித்தானியத் தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவின பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கெடுத்துக் கொள்ளப்போவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து, பிரித்தானிய வாழ் தமிழர்கள் கவலை கொள்ள வைத்திருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து வேட்டையொன்றில் லண்டன் தமிழர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்துள்ளனர்.

பொதுநலவாய உச்சிமாநாட்டு விவகாரம் மட்டுமல்ல அதற்கும் அப்பால், சிறிலங்கா தொடர்பில் பிரித்தானிய அரசின் கொள்கை நிலைப்பாட்டில் ஓர் இறுக்கமான மாற்றம் அவசியம் என்பதனை வலியுறுத்தும் பொருட்டு இக் கையெழுத்து வேட்டை இடம்பெற்று வருகின்றது.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக பிரித்தானியாவின் வெளிவிகார தேர்வுக் குழுவின் கவனத்திற்கு சிறிலங்கா விவகாரத்தினை  தீவிரமாக கொண்டு செல்வதன் ஊடாக ,பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதோடு, பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டினை பிரித்தானியா எடுப்பதற்கு வழிகோலும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

நாதம் ஊடகசேவை













  









0 comments:

Post a Comment