Saturday 10 August 2013

1 46 679 தமிழர்கள் எங்கே ? சிறிலங்கா மீது அதிகரிக்கும் அழுத்தம் !



1 46 679 தமிழர்கள் எங்கே ? சிறிலங்கா மீது அதிகரிக்கும் அழுத்தம் !
By naatham On 9 May, 2012 At 10:05 AM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments
 இலங்வைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசு மேற்கொண்டது இனப்படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவரும் நிலையில், வன்னிப் போர்களத்தில் காணாமல் போனதாக கூறப்படும் 1 46 679 தமிழர்கள் நிலை என்பது பற்றி விளக்குமாறு, சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது.
2008ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்ட சனத்தொகை புள்ளி விபரத்துக்கும், 2009ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை தொடர்பில், சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்துக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி வித்தியாசத்தினை அடிப்படையாக வைத்து, 1 46 679 தமிழர்களின் நிலை என்ன என, மன்னார் மாவாட்ட வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் கேள்வியெழுப்பியிருந்தார்.
இவ்விருபுள்ளி விபரங்களின் ஆவணங்களை சாட்சியமாக கொண்டு, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இது குறித்து இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இவ்விவகாரம் குறித்து, சிறிலங்கா மீது பல சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள,; தகுந்த ஆவணங்களுடன் முன்வைத்த இவ்விடயம், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தினைப் பெற்றிருந்ததோடு , பல நாடுகள் இது தொடர்பில் தங்களது கருத்துக்களை ஏலவே வெளியிட்டிருந்தன.
வன்னிப் போரின் இறுதி 7 மாதங்களில் மட்டும் காணாமல் போனவர்களின் தொகையாவே, 1 46 679 பேரினை வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை . நா நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009 ஆண்டில் ஐந்து மாதங்களில் மட்டும் 40,000 தமிழ் மக்கள் படுகொலை செயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாதம் ஊடகசேவை

0 comments:

Post a Comment